திரு.இரா.பிள்ளைவிநாயகம்

எழுத்தாளரின் பெயர்: திரு.இரா.பிள்ளைவிநாயகம் புனைப் பெயர் : இல்லை பாலினம் : ஆண் கிளை : தென்னவன் பூர்வீக ஊர் : சிவகளை பணி : வனத்துறை (பணி நிறைவு) பிறந்த தேதி :15-02-1959 முகவரி : 4/55/3 நடுத்தெரு,சிவகளை, தூத்துக்குடி மாவட்டம், 628753. மின்அஞ்சல் முகவரி: NA கை பேசி எண்: 9965515840
திரு.இரா.பிள்ளைவிநாயகம் அவர்கள் துணை வன பாதுகாவலராக (Deputy Conservator of Forests - DCF) பணி செய்து ஓய்வு பெற்றுள்ளார்கள். இவருக்கு படிக்கும் காலத்திலேயே தமிழ்மீது பற்று அதிகம் இருந்தது. தற்போது அது செயல் வடிவம் பெற்று வருகிறது. ஆன்மீகப் பணி, சமூகப் பணி மற்றும் நமது சமுதாய வளர்ச்சியில் நாட்டம் உண்டு. "nangudivellalarmatrimony.com" என்ற நமக்கான இணையதள திருமண தகவல் மையம் அமைய தூண்டுகோலாக இருந்தது மட்டுமள்ளாது அதை பாரமாரித்தும் வருகிறார். கோவில் மற்றும் குளங்களை பாரமாரிப்பதில் மிகந்த நாட்டம் உண்டு. எண்ணற்ற மரங்களை நடுவு செய்துள்ளார். நன்குடி வேளாளர் சமுதாய மக்களின் சுபகாரிய சடங்குகளுக்காகவும், துக்ககாரிய சடங்குகள் செயல் முறைகளுக்காகவும் முதல் முயற்சியாக 2019ல் விபரங்கள் சேகரித்து இரண்டு புத்தகங்கள் எழுதினார். சுபகாரிய சடங்குகளில் விட்டுப் போனவற்றை கூடுதல் தகவல் இணைப்பாக 2020 ல் ஒரு புத்தகம் வெளியிட்டார். கோவில் சிறப்பு பூஜை வழிபாட்டு பாடல்கள் மற்றும் இறைவழிபாட்டு பாடல்கள் திரட்டு என்ற புத்தகத்தையும், காலத்தின் கண்ணாடி மரபுக் கவிதைத் தொகுப்பு-1 என்ற புத்தகத்தையும், 2021-ல் வெளியிட்டார். தினசரி வழிபாட்டு பாடல்கள் என்ற புத்தகத்தை 2022-ல் வெளியிட்டார். மரபுக் கவிதைத் தொகுப்பு -2 என்ற புத்தகத்தை 2023-ல் வெளியிட்டார். எளிய முறை தினசரி வழிபாட்டு பாடல்கள் என்ற புத்தகத்தை 2024-ல் வெளியிட்டார். திருக்குறள் கூறும் இல்லறம் என்ற நூலை 2025-ல் வெளியிட்டார். ஆக வருடந்தோறும் ஒரு புத்தகத்தையேனும் வெளியிட்டு வருகிறார்