About Us
வணக்கம்.
என்னைப்பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எனது பெயர் கண்ணன் என்ற முத்துசுவாமி, காளிர் கிளை, ஊர் முடிவைத்தானேந்தல், தந்தையார் பெயர் Captain. M. அருணாசலம் தாயார் பெயர் C. பார்வதி. நான் மதுரையில் சாஃப்டெக் இண்டியா கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் என்ற பெயரில் கணினி வியாபாரம் செய்துவருகிறேன்.
தன்னை வெளிக்காட்ட விரும்பாத செக்காரக்குடியை சேரந்த நமது உறவினர் ஒருவர், நம் சமூகத்தைச் சேர்ந்த மகத்தான எழுத்தாளர்கள் பல பேர் உள்ளார்கள் என்றும், அவர்களது படைப்புகள் நமது சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு தெரியவில்லை என்றும் நமது முன்னோர்கள் பல பேர் எழுதிய நூல்கள் எதுவும் இன்று நமக்கு தெரியவில்லை என்றும் பல நூல்கள் அழிந்தே போய்விட்டது என்றும் குறைந்த பட்சம் எழுத்தாளர்களின் பெயர்களையும் அவர்களது படைப்புகளையுமாவது ஆவண படுத்த உதவி தேவை என்று என்னை அணுகினார்.
தன்னை வெளிக்காட்ட விரும்பாத நமது உறவினரின் தன்மை சற்று நெருடலை ஏற்படுத்தினாலும் அவரது நல்லெண்ணத்தையும், நமது சமூதாயத்திற்கு அவரது பங்களிப்பை நல்க வேண்டும் என்ற உணர்வையும் கருத்தில் கொண்டு என் சொந்த செலவில் இந்த nangudivellalarwriters.com என்ற இணையதளத்தை எனது சமூதாய பணியாக ஏற்று உருவாக்கி, பராமரிக்கவும் உள்ளேன். இச்சேவை முற்றிலும் இலவசமானது.
இந்த இணையதள தொழில் நுட்பமானது நிலையான வலைப்பக்கங்களை (Static Web Pages) கொண்டது, மாறாக பயனர் தொடர்புகளுக்கு ஏற்ப தகவல்கள் மாறக்கூடிய வலைப்பக்கங்களை (Dynamic Web Pages) கொண்டது அல்ல. ஆகவே எழுத்தாளரின் பெயர்களும், அவர்களது படைப்புகளும் இணையதளப் பதிவின் காலவரிசை படியே அமையும், அகர வரிசைப் படி அமையாது.
இந்த இணையதளமானது எழுத்தாளர்களையும் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் சிறு குறிப்புகளோடு அறிமுகம் செய்துவைக்கும் ஒரு முயற்சி மட்டுமே. முழு புத்தகத்தையும் பத்திர படுத்த விரும்பினால் நீங்களே .pdf, .epub, .mobi போன்ற புத்தக வடிவங்களில், OneDrive, GoogleDrive, DropBox போன்ற மேகக்கணினி சேமிப்புகளில் சேமிக்கலாம். இந்த சேமிப்பு கணக்குகளின் பயனர் பெயரையும், அதற்கான கடவு சொல்லையும் உங்களது சந்ததியினரிடம் கொடுத்து நீண்ட காலம் அழியாமல் பாதுகாக்கலாம்.
தங்களை பற்றியும் தாங்கள் எழுதிய புத்தங்களை பற்றியும் நமது nangudivellalarwriters.com பதிய விவரங்களை தெரிவிக்க விரும்பினால், இந்த லிங்க்கை பயன்படுத்துங்கள் – https://forms.gle/zcxfRuo5KeBhV2Tx9
ஒவ்வொரு படைப்பிற்கும் (புத்தகத்திற்கும்) தனித்தனியாக கூகிள் படிவத்தை https://forms.gle/zcxfRuo5KeBhV2Tx9 சொடிக்கி நிரப்ப வேண்டும்.
ஐயா, சந்திரசேகர் குருசாமி அவர்கள் இந்த nangudivellalarwriters.com -க்கு ஒருங்கிணைப்பாளராக செயல் படுவார்கள் அவர்களை அவரது கைபேசி எண் 98413 48284 -ல் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் தொழில் நுட்ப உதவிக்கு என்னை எனது கைபேசி எண் 99449 99876 –ல் அழைக்கலாம்.
நூல்களின் காப்புரிமை சம்பந்தப் பட்ட எழுத்தாளரையே சேரும். புத்தகங்களை வாங்க விரும்புவர்கள் புத்தகத்தை எழுதிய எழுத்தாளரை நேரடியாக தொடர்பு கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
கண்ணன் என்ற முத்துசுவாமி.